|
சர்வதேச குழு: விஷேட செய்தி நிறுபர் சின்வா அவர்கள் தெரிவித்தன் படி, இவ் வருடம் சீனாவிலிருந்து முஸ்லிம்கள் 12700 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக பெயர்களை விண்ணப்பித்திருந்தனர். ஆனால் சென்ற வருடத்தை வி 700 பேர் அதிகமாக காணப்படுகின்றனர்.
ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): இவ்வருடத்தில் மக்காவை நோக்கிச் சென்ற யாத்திரிகளில் 40 வீதத்தினர் பெண்களாவார்கள். இப்பெண்களில் 60 வயதையுடையவர்களுடையவர்கள், இம்முறை சீனாவிலிருந்து 27 பிரதேசங்களிலிருந்து மக்காவிற்குச் சென்றுள்ளனர்.. சின்கியான்க் என்ற பிரதேசத்திலிருந்து இவ்வருடம் 3000 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ளனர்.
சீன அரசாங்கம் இவ்வருடம் ஹஜ் யாத்திரிகளுக்கான 30 விமானங்களை ஏற்பாடு செயதுள்ளது. மற்றுமல்லாமல் லன்ஜ10, கும் மீன்க், பெய்கன், உரும்சி, இன்ஷவான் போன்ற நகரங்களிலிருந்து நேரடியாக மதீனாவுக்குச் செல்வதற்கான போக்கு வரத்து வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
இவ்வருட சீனர்களை வழிநடாத்திச் சென்றவர் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியாகிய மார்க்க அறிஞரும் அரபு, ஆங்கில மொழியில் பாண்டித்தியம் பெற்றவருமான முஸ்தபா பான்ஷீயு அவர்களாவார்கள். இவர்கள் இவ்வருட ஹஜ் வழிகாட்டியும் தலைவராகவும் இருப்பதுடன் சீன இஸ்லாமிய நிலையத்தின் பிரதித் தலைவரும் ஆவார். இரு நாடுகளுக்கிடையிலான ஹஜ் விவகாரத்தில் இவர்களே பொறுப்பை ஏற்றுள்ளனர்
சீனர்கள் முதல் தடவையாக 1952ம் ஆண்டிலேயே மக்காவிற்கு பயணத்தை தொடங்கினர். 16 பேர் கொண்ட குழுவை வழிநடாத்தி;ச் சென்றவர் சின்கியான்க் பிரதேசத்திலுள்ளவரும் மார்க்க அறிஞரான அமீன் மஹ்ஸூம் அவர்களாவார்கள். அன்றைய நாட்;களில் ஹன்க் கன்க், பர்மா, இந்தியா, கராச்சி நகரம், பாகிஸ்தான் பாதை மார்க்கமாக மக்காவை அடைந்தனர். ஏனெனில் கராச்சியில் சவூதி அரேபிய விஸாவை பெற்றுக் கொள்வதற்காக வேண்டியே ஆகும். அன்றைய நாட்களில் சீனாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலுள்ள சீரற்ற தொடர்பு விஸாவை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைக்கு அம்மக்களை இட்டுச்; சென்றது. இவ்வாறாக விஸாவை பெற்றுக் கொள்ளாத நிலைமையில் சீன முஸ்லிம்கள் மீண்டும் நாட்டிற்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறாக 1954, 1953 ம் ஆண்டுகளிலும் தொடந்து இதே பிரச்சினைகளுக்கு அம்மக்கள் முகங்கொடுத்து வந்தனர். 1955ம் ஆண்டு ஜூயின் லாயி என்பவர் சீனாவின் பிரதம் மந்திரியாக கடமையாற்றினார். பிரதம் மந்திரி மற்றும் மார்க்க அறிஞர்கள் 29 நாடுகள் கொண்ட முஸ்லிம் நாடுகளின் அங்கவர்களின் ஆசிய ஆபிரிக்க அமர்வில் கொண்ட போது இப்பிரச்சினையை முன் வைத்தனர். பின்பு அதில் வெற்றியும் கண்டனர்.
சவூதி அரேபியாவின் அன்றைய ஹஜ் விவகாரத்தின் தலைவர் சஊது; பைஸல் அவர்கள் சீன பிரதம மந்திரி அவர்களை சந்தித்து பேசிய போது அவர்கள் சீன முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளைக் கண்டு அதே வருடத்தில் சீன முஸ்லிம்கள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றச் செல்வதற்கான வசதிகளை செய்து கொடுத்தார்.
498729
|