|
செனகல் ஈரானிய கலாச்சார நிலையத்தில் பெப்ரவரி மாதம் ஈரரிய கலாச்சார வாரத்தை நடாத்துகின்றது.
செனகல் ஈரான் நாட்டின் தூதுவர் ஹஸன் ஸாதே அவர்கள் செனகல் கலாச்சார அமைச்சருடன் இது விடயமான பேசியபோது, பெப்ரவரி மாதம் ஈரானிய புரட்சி வெற்றியின் 31 வது வருடாந்த நிகழ்வில் கலாச்சார வாரத்தை நடாத்தவுள்ளதாக கூறினார்.
அதே நேரம் செனகல் நாடு அதன் 50 வது சுதந்திர தினத்தை தெஹ்ரானில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
ஈரானிய ஒலி ஒளி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் ஸர்காமி அவர்கள் செனகலுக்கு வருகை தந்திருந்த போது, நடாத்தப்போகும் நிகழ்ச்சிகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்.
இருநாடுகளுக்கிடையிலான கலாச்சார தொடர்புகளை ஏற்படு;த்துவதுடன் தி;ரைப்படம், புத்தகங்கள், சங்கீதம் என்பன அந்நாளில் அறிமுகப்படுத்தக் கூடிய முக்கிய நிகழ்வுகளாகும்.
இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சார மார்க்க ஒற்றுமைகள் மேலும் தொடர்புகளை நெறுக்கமாக்குகின்றது என ஹஸன் ஸாதே அவர்கள் தெரிவிததார்கள்.
இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்த பரிமாற்றதில், செனகல் நாடு திரைப்படத் தயாரிப்பில் அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தீர்க்கும் விதமாக அமைந்தது.
498315
|