|
சர்வதேச குழு: இவ்வருடம் ரஷ்யாவிலிருந்து 20 ஆயிரம் முஸ்லிம்கள் புனித மக்கா நகரை நோக்கி ஹஜ் கடமைகளை நிறைவேற்றச் சென்றனர்.
ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): சவூதி அரேபியா இவ்வருடம் ரஷ்ய முஸ்லிம்களின் ஹஜ் பயணம் விடயத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளது.
மற்றும் இவ்வருடத்தில் பரவியிருக்கும் தொற்று நோயின் காரணத்தினால் ஹஜ் பயணிகளை குறைத்தது. சென்ற வருடத்தை விட 6 ஆயிரம் பேர்கள் குறைந்துள்ளனர்.
மொஸ்கோவிலுள்ள 8 இஸ்லாமிய நிலையங்கள், தாக்தான், தாஜிகிஸ்தான், இங்குஸ்தியா, செசென், பக்காஸிலிருந்து இறையில்லத்தைச் சென்றுள்ளனர்.
80 வீதமானோர் பக்காஸிலிருந்து இறையில்லத்தை தரிசிக்கச் சென்றனர். இவ்வருடம் 2.5 மில்லியன் முஸ்லிம்கள் மக்காவிற்கு ஹஜ் கிரிகைகளை நிறைவேற்றச் சென்றுள்ளனர்.
500427
|