|
பிரித்தானிய பிரதம மந்திரி முஸ்லிம்களு;ககு ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரித்தார்.
சர்வதேச குழு: பிரித்தானியாவின் மந்திரி கேர்டன் பிரவுன் ஹஜ்ஜாஜிகளுக்கு தனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஈரான் குர்ஆன் செயதிகள் ஸ்தாபனம் (இக்னா): பாக்கிஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் கிடைத்த தகவலின் படி, 25 ஆயிரம் முஸ்லிம்கள் பிரித்தானியாவிலிருந்து மக்க மா நகரை நோக்கிச் சென்றுள்ளனர். இது விடயமாக பிரதம மந்திரி அவர்கள், பிரித்தானியா என்பது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும் இவ்வருடம் இவ்வளவு தொகையான முஸ்லிம்கள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றச் சென்றுள்ளனர். இதை நாம் பெருமையுடன் பேசக் கூடிய ஒரு விடயமாகும் எனக் கூறிய அவர் அம்முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதி நாம் சிறந்த வைத்தியக் குழு, ஆலோசனைக் குழு போன்ற அடிப்டைத் தேவைகளை செய்து கொடுத்துள்ளோம் என்றார்
அவர் மேலும் தெரிவிக்கையில், இச்சந்தர்ப்பம் முஸ்லிம்கள் மிகவும் குதூகலத்துடன் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இந்நாளில் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது இனிய பெருநாளை தெரிவித்துக் கொள்கின்றேன் என இச்செய்தியை எத்தி வைத்தார்.
500489
|