|
குர்ஆன் செயற்பாட்டுக் குழு: ஈரானின் குர்ஆன் கலாசார நிலையம் 34 குர்ஆன் கலைக்களஞ்சியங்களை ஒன்றுசேர்க்கும் பணியைப் பூர்த்தி செய்துள்ளது என நிலையத் திணைக்களத்தின் பொறுப்பாளர் குறிப்பிட்டார்.
இப்பணியைப் பூர்த்தி செய்ய எட்டு வருடங்கள் எடுத்தன என திணைக்களப் பொறுப்பாளர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இஸா இஸாசாதேஹ் இக்னாவுக்குத் தெரிவித்தார். எதிர்வரும் ஈரானிய வருடத்தின் ஆரம்பத்தில் இது பதிப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இஸாசாதேஹ் மேலும் குறிப்பிடும் போது, இத்தொகுப்பின் இரண்டு பாகங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன. அவை, நபி (ஸல்) அவர்களது வாழ்க்கைப் பண்புகள் தொடர்பான ஆக்கங்களையும் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளன என்றார்.
ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் ஆன்மீகத் தலைவர் செய்யித் அலி காமெனயி அவர்கள் ஈரானிய வருடமான 1385 ஆகிய இவ் வருடத்தை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருடம் எனப் பிரகடனப்படுத்தியுள்ளதை கௌரவிக்கும் வகையில், நாம் இச்சமர்ப்பணத்தை வழங்கியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த குர்ஆன் கலைக்களஞ்சியம், அகர வரிசை முறையிலமைந்த தகவல்களின் ஒழுங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு பல்லாயிரக்கணக்கான குர்ஆனிய கருப்பொருள்களை உள்ளடக்கியுள்ளதுடன், இதுவே ஈரானின் மிகப் பெரும் குர்ஆன் கலைக்களஞ்சியமாகவும் இருக்கும் என மேலும் அவர் தெரிவித்தார்.
518985
|