|
சர்வதேச குழு: கர்பலா தொடர்பான சர்வதேச கருத்தரங்கொன்று துருக்கியிலுள்ள ரிபப்ளிகன் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் சமயக் கற்கைகள் துறை, இம்மாதம் 21 தொடக்கம் 23ம் திகதி வரை இக்கருத்தரங்கினை நடத்தும்.
துருக்கி அல்லது ஆங்கில மொழியில் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் முன்னுரைகள் ஜனவரி 9ம் திகதிக்கு முன்னர் கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவை 300 தொடக்கம் 400 சொற்களுக்கிடையில் அமைந்திருக்க வேண்டும்.
முழு ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவதற்கான இறுதித் திகதி ஏப்ரல் 17 ஆகும். கட்டுரைகள், துருக்கி பல்கலைக்கழகத்தின் 18 சமயக் கற்கைத்துறை விரிவுரையாளர்களைக் கொண்ட குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுள் மிகச் சிறந்தது கருத்தரங்கில் முன்வைக்கப்படும்.
519114
|