|
சர்வதேச குழு: 2010ல் இஸ்லாமிய உலகின் கலாசாரத் தலைநகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அல்ஜீரியாவின் டெலம்கென் நகரை நினைவுகூர்வதற்காக இடம்பெறவுள்ள வைபவத்தின் போது, புதிய குர்ஆனிய நிலையமொன்று திறந்து வைக்கப்படவுள்ளதென நஸீஜ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
இக்குர்ஆன் நிலையமானது, மாநாட்டு அறை, அறிவியல் கலாசார நடவடிக்கைகளுக்கான மண்டபங்கள், நூலகம், இன்டர்நெட் அறை மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குர்ஆனிய கற்கைகளை நடத்துவதற்கான வகுப்பறைகள் என்பவற்றைக் கொண்டிருக்கும்.
இந்நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ள நகரில் இடம்பெறும் வைபவத்தின் போது, பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரபுலகின் மேற்குப் பகுதியில் உள்ள முதலாவது அந்தலூசியா ஆய்வு நிலையமும் டெலம்கெனில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன்பொருட்டு, இந்நிலையம் ஆன்மீக இலௌகீக மரபுரிமை வளங்கள் பற்றி ஆய்வுசெய்து வருகின்றது.
518993
|