|
சர்வதேச குழு குழு: மேற்குலகம், மானுடத்தின் தத்துவவியல், அறிவியல், மற்றும் கலாசாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது போன தனது தோல்விகளை மறைப்பதற்கு இஸ்லாமோபோபியா மற்றும் இஸ்லாம் எதிர்ப் போக்கு என்பவற்றைக் கைக்கொண்டு வருகின்றது என தான்சானியாவிலுள்ள ஈரான் கலாசாரப் பொறுப்பதிகாரி தெரிவிக்கின்றார்.
இக்னாவுக்கு அவர் வழங்கிய செவ்வியின் போது, மேற்குலகம் இஸ்லாமோபியா என்பதனை தனது தோல்விகளை மறைக்கப் பயன்படுத்தி வருகின்றது என்று கூறிய அவர், இக்கருத்தியலைப் பரப்பி வரும் இஸ்லாமிய விரோத சக்திகளின் இந்நடைமுறை புதிதானதல்ல என்றும், நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற அக்காலப் பகுதியிலிருந்து இஸ்லாத்துக்கு விரோதமான கருத்தியல்கள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுக் கொண்டே வருகின்றன என்றும் குறிப்பிட்டார். இதன் இரண்டாவது அங்கமே தற்போது இடம்பெறுகின்றது எனக் கூறிய அவர், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இஸ்லாமிய விரோத சக்திகளால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதும் தடுப்பதுமே இத்தகைய கருத்தியல் பிரகடனங்களினதும் திட்டமிடல்களினதும் உள்நோக்கம் என்பதைக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம்களது அலட்சியம் விழிப்புணர்வற்ற தன்மை என்பன இத்தகைய இஸ்லாமிய விரோத பிரசாரங்களுக்கு பல வழிகளில் துணைபோகின்றன என்பதனையும் கவலையுடன் தெரிவித்தார்.
இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியில், மேற்கினால் அறிமுகப்படுத்தப்படும் இஸ்லாத்திற்குப் புறம்பாக முஸ்லிம்கள் தமது மார்க்கத்தை சரியாக உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேற்கில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இதில் மிகப் பெரும் பொறுப்புள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றுவது, இஸ்லாமோபோபியா போன்ற இஸ்லாமிய விரோத கருத்தியல்களை அகற்றி முஸ்லிம்களைப் பாதுகாக்க உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.
518814
|