Home | Contact IQNA | About IQNA
   18:34 GMT All Headlines: 15
Search:

News
Access to News According to Topic
Services
Links
Your Suggestions
Submit News
Full Text of Holy Quran
Quran Recitation
Hadiths
by the Infallible
Print Version Mail to Your Friend
    New ID : 520400
ஐஆர்ஜிசி தரைப்படைகளுக்கான குர்ஆன் போட்டி ஜனவரி நடுப்பகுதியில்

குர்ஆன் செயற்பாட்டுக் குழு: இஸ்லாமியப் புரட்சி காவல் படையினருக்கான (ஐஆர்ஜிசி) குர்ஆன் போட்டி நிகழ்ச்சியின் 28ஆவது தொகுதியை, ஜனவரி 17ம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என படையணியின் பொது உறவுப் பிரதிப் பொறுப்பாளர் இக்னாவுக்குத் தெரிவித்தார்.

பிரதிப் பொறுப்பாளர் கொலனல் அஹ்மத் அலிநிசாத் தொடர்ந்து கூறும் போது, இப்போட்டி ஆண்களுக்கும் பெண்களுக்கும் என இரண்டு பிரிவுகளாக நடைபெறும். ஆண்கள், 5 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 10 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 15 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 20 ஜுஸ்உ குர்ஆன் மனனம், முழுக் குர்ஆன் மனனம் ஆகிய பிரிவுகளிலும், தர்தீல் தஹ்கீக் மற்றும் அதான் பிரிவுகளிலும் பங்குபற்ற முடியும். பெண்கள் குர்ஆனிய விரிவுரை மற்றும் குர்ஆனிய எண்ணக்கருக்கள் ஆகிய பிரிவுகளில் பங்குபற்ற முடியும் எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுவோர், ஜனவரி 24 தொடக்கம் 26 வரை ஆண்களுக்கும், ஜனவரி 31 முதல் பெப்ரவரி 3 வரை பெண்களுக்கும் நடைபெறவுள்ள ஐஆர்ஜிசியின் தேசிய குர்ஆன் போட்டியில் பங்கு கொள்வர் எனவும் அவர் தெரிவித்தார்.

519733

Reproduction of this article is permitted provided reference is made to the source.
Opinion
 
Name:

Email:

Your Comment:


 
Rate This Story
 
Your Rating:
2 3 5
 
E-Mail: en-intl@ikna.ir
2003 - 2008 Iranian Quran News Agency.