|
சர்வதேச குழு: ஈராக்கிய குர்ஆன் காரி ஹாஷிம் இஸ்மாயீல் அல்ஜசாயிரி, இந்தியாவில் இடம்பெற்ற சர்வதேச குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார் என அஸ்ஸவ்த் அல்ஈராக் தெரிவிக்கின்றது.
ஈராக்கின் மைசான் மாகாணத்தைச் சேர்ந்த அல்ஜசாயிரி, ஷீயா வக்ப் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஈராக்கிய தேசிய குர்ஆன் ஓதல் போட்டியில் தெரிவாகி, இந்தியாவில் இடம்பெற்ற சர்வதேச போட்டியில் ஈராக்கை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார்.
இப்போட்டி, ஆந்திரா பிரதேச ஹைதராபாத் நகரில் இடம்பெற்றது. 30 அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து குர்ஆன் காரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த போட்டியாளரொருவர் இரண்டாமிடத்திற்கும் யெமனைச் சேர்ந்த ஒருவர் மூன்றாமிடத்திற்கும் தெரிவாகினர்.
551576
|