|
சர்வதேச குழு: முஸ்லிம் உலகில், நெதர்லாந்தின் பெயரைக் கெடுக்கும் படியாக நடந்து கொண்டமைக்காக வலதுசாரி தீவிரப்போக்காளரும் சுதந்திரக் கட்சியின் இஸ்லாமிய விரோத செயற்பாட்டாளருமான கீர்ட் வில்டர்ஸை, டச் கரடேகர் வெளிவிவகார அமைச்சர் மாக்சிம் வெர்ஹாகன் கண்டித்துள்ளார்.
அவரது முறைமை எளிமையானது, அவர் மிகக் கீழ்த்தரமான முறையில் சிலரை சிலருக்கு எதிராகச் செயற்படுமாறு தூண்டிக் கொண்டிருக்கின்றார் என, ஹோலந்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் போது வெர்ஹாகன் தெரிவித்தார்.
அவர் டச் மக்களின் ஆர்வத்தையும், உலகளவில் நெதர்லாந்துக்கு இருக்கும் மதிப்பையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றார். அவரை தொடர்ந்தும் இவ்வாறு இருக்க அனுமதிப்பது, மிகப் பெரும் பின்விளைவுகளையும் தீமைகைளயும் ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வில்டர்ஸின் அண்மைய பத்திரிகையாளர் மாநாடு குறித்துக் கூறிய அவர், கருத்துச் சுதந்திரம் என்ற அனுமதி, பொதுமக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் ஆயுதமல்ல. மற்றவர்களது மதத்திற்கு மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது எனத் தெரிவித்தார்.
இஸ்லாம் ஒரு பிரச்சினையல்ல. இஸ்லாமிய உலகுடன் தொடர்புடைய 800,000 மக்கள் நெதர்லாந்தில் இருக்கின்றனர். அவர்கள் நாட்டின் மொத்த சன்த்தொகையில் 5.3 வீதமாகும். அவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பாட்டு, டச் சமூகத்துடன் இணைந்து சமாதானமாக வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறிய அவர், முஸ்லிம் மற்றும் அரபுலகில் நெதர்லாந்தின் கண்ணியத்தை மீளவும் கட்டியெழுப்ப நாம் முயற்சிக்க வேண்டியுள்ளது எனவும் வலியுறுத்தினார்.
551687
|