புதிய வருடத்தில் அனைத்து இஸ்லாமிய, சமூக, சமய, கல்வியியல் மற்றும் ஊடக நிலையங்களிலும் ஐக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இச்சுலோகத்தைத் தெரிவு செய்துள்ளதாக அக்கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூகத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் குறிப்பாக அறிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கல்விமான்கள் அனைவரும் பொதுமக்கள் மத்தியில் ஐக்கியத்தின் தேவையை வலியுறுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
ஆளும் அரசாங்கத்தினதும் அதன் ஊடகங்களினதும் தாக்குதல்களை துணிவுடன் எதிர்கொண்டு வரும் தமது கவுன்சிலின் மத்திய சபை உறுப்பினர்களை பாராட்டுவதாகவும் அவ்வறிக்கையின் தொடரில் கவுன்சில் தெரிவித்துள்ளது.
பஹ்ரைனின் மாவட்ட நீதிமன்றம், ஷீஆ அறிஞர்கள் கவுன்சிலின் மத்திய சபை உறுப்பினர்கள் ஏழு பேரை திங்கட்கிழமை கைது செய்தது.
மற்றொரு புறத்தில் அந்நாட்டின் நீதியமைச்சர், இக்கவுன்சிலை இல்லாதொழிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
1292885