யெமனின் தேசிய குர்ஆன் மனனப் போட்டி நிறைவு


குர்ஆன்: எமது பாதை, எமது சமயத்தின் அடிப்படை மற்றும் எமது வாழ்வின் சட்டம்” எனும் மகுடத்தில் இப்போட்டி இடம்பெற்றதாக சபாநெட் இணையத்தளம் தெரிவிக்கின்றது.



இறுதிச் சுற்றின் ஆரம்ப விழாவில் உரையாற்றிய அந்நாட்டின் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர், இளைஞர்கள் புனித அல்குர்ஆனை மனனமிடுவது மற்றும் அதற்குத் தொண்டாற்றுவது அதன் போதனைகளை வாழ்வில் அமுல்படுத்துவது தொடர்பாக வலியுறுத்திப் பேசினார்.



அவரைத் தொடர்ந்து யெமனின் குர்ஆனிய விவகார அமைச்சர் ஷைக் ஹஸன் அப்துல்லாஹ் அல்ஷைக்கும் உரைநிகழ்த்தினார். தேசி மற்றும் சர்வதேச குர்ஆன் போட்டிகளில் சிறார்களையும் இளைஞர்களையும் பங்குகொள்ளச் செய்வதன் முக்கியத்துவம் பற்றி அவர் வலியுறுத்தினார்.



புனித அல்குர்ஆனை மனனம் செய்தவர்கள், சமூகத்தில் மிகச் சிறந்த முன்மாதிரிகளாக விளங்க வேண்டுமென வலியுறுத்திய அவர், முஸ்லிம்கள் மத்தியிலான வேறுபாடுகளை மறந்து குர்ஆனியப் போதனைகளின் பிரகாரம் ஒன்றுபட்டுழைக்க அனைவரும் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.



பல்வேறு வயதுக் குழுக்களுடைய போட்டியாளர்கள் பங்குபற்றிய போட்டியின் இறுதிச் சுற்று, அமைச்சின் பிரபல குர்ஆனிய காரிகள் கமிட்டியினால் மேற்பார்வை செய்யப்பட்டது.



செப்டம்பர் 5ம் திகதி போட்டி நிறைவு பெறவுள்ளதுடன் அதைத் தொடர்ந்து இடம்பெறும் நிறைவு விழாவில் வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் வழங்கப்படும்.



1281749