இஸ்லாமிய அஸாத் பல்கலைக்கழகம் நடத்தவுள்ள 28ஆவது மாணவர் தேசிய குர்ஆன் மற்றும் இத்ரத் விழா


28ஆவது விழாவின் ஒழுங்குகள், தயாரிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவிக்கின்றது.



குர்ஆன் பாராயணம், மனனம், விரிவுரை என்பவற்றையும் குர்ஆனியப் போதனைகளை அமுல்படுத்துவது மற்றும் தெளிவுபடுத்துவது என்பற்றையும் நோக்காகக் கொண்டு இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.



பல்கலைக்கழக மாணவர்களது சமய அறிவை விஸ்தரிப்பது, பல்கலைக்கழகங்களில் ஆன்மீக மற்றும் குர்ஆனிய சூழலை மேம்படுத்துவது, மற்றும் அஹ்லுல்பைத்தினரின் சீறா மற்றும் போதனைகளுடனான மாணவர்களின் பரிச்சயத்தை அதிகப்படுத்துவது என்பனவும் இவ்விழாவின் குறிக்கோள்களுள் சிலவாகும்.



28ஆவது விழாவில் பல்வேறு பிரதான மற்றும் பகுதி நேர நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. பேச்சு, எழுத்து மற்றும் ஆய்வுப் பிரிவுகள் பிரதான நிகழ்வுகளாகவும், இலக்கியம் மற்றும் கலை உள்ளிட்ட விடயங்கள் பகுதி நேர நிகழ்வுகளாகவும் இடம்பெறவுள்ளன.



1284289