புனித அல்குர்ஆன் ஓதல் தொடர்பான கல்வியியல் பாடநெறியொன்று, பிராங்க்போர்ட்டிலுள்ள சிறார்கள் மற்றும் பதின்வயதிருக்கென நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பாடநெறி, பிராங்க்போர்ட்டிலுள்ள இஸ்லாமிய நிலையத்தினால் 5 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் பதின்வயதினருக்கு நடத்தப்படவுள்ளதாக இக்னாவின் ஐரோப்பியக் கிளை தெரிவிக்கின்றது.
இப்பாடநெறியில் கலந்து கொள்ள விரும்புவோர், ஆகஸ்ட் 24ம் திகதி குறித்த நிலையத்திற்கு வந்து தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய நிலையத்தினால், சனிக்கிழமை தோறும் உள்ளூர் நேரம் பிற்பகல் 2.30க்கு இப்பாடநெறி நடத்தப்படவுள்ளது.
பிராங்க்போர்ட் இஸ்லாமிய நிலையம், பிராங்க்போர்ட்டின் ஷென்கல் ஒழுங்கையில் அமையப்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் முஸ்லிம்கள், ஐக்கிய அமெரிக்கா, ஜோர்டான், பலஸ்தீன், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1275863