ஐக்கிய அரபு இராச்சியத்தில், இளைஞர்களுக்கான புதிய குர்ஆனியப் பாடநெறியொன்றை ஆகஸ்ட் 27ம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கல்வியியல் பாடநெறி, டுபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இரு நகரங்களிலும் ஒழுங்கு செய்யப்படவுள்ளது என இக்னாவின் டுபாய் கிளை தெரிவிக்கின்றது.
இப்பாடநெறியில் கலந்து கொள்வோருக்கு, அரபு மொழி இலக்கணம் மற்றும் அல்குர்ஆன் ஓதலின் தஜ்வீத் சட்டங்கள் என்பன போதிக்கப்படும்.
30 தினங்களுக்கு குறித்த இரு நகரங்களிலும் இப்பாடநெறி இடம்பெறவுள்ளது.
பாடநெறியில் கலந்து கொள்வோருள் சிறந்த திறமையை வெளிப்படுத்துவோர் மாத முடிவில் இடம்பெறும் நிறைவு விழாவின் போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவர்.
1276751