کد خبر: 1279801
تاریخ انتشار : ۰۹ شهريور ۱۳۹۲ - ۰۸:۰۱

மொஸ்கோ விமான நிலையங்களில் தொழுகை அறைகள்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் முஸ்லிம் பயணிகளுக்கான தொழுகை அறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.



பெருமளவான முஸ்லிம் பயணிகளிடமிருந்து இது தொடர்பான வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து, விமான நிலையங்களின் அதிகாரிகள் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக இக்னாவின் ஐரோப்பியக் கிளை தெரிவிக்கின்றது.


மொஸ்கோவின் வினுகூ சர்வதேச விமான நிலையத்தில் முஸ்லிம்கள் தமது தொழுகையை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரத்தியேகமான அறையொன்று ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.


டொமடெடவோ சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே இயங்கி பின் மூடப்பட்டிருந்த தொழுகை அறை ஆகஸ்ட் 26ம் திகதி மீளத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


ரஷ்யாவில் ஓதடக்ஸ் கிறிஸ்தவர்களையடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட சமூகமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ரஷ்யாவில் வாழும் 20 மில்லியன் முஸ்லிம்களில் பெருமளவானோர் அந்நாட்டின் தென்குடியரசுகளில் வசித்து வருகின்றனர்.



1278937


captcha