کد خبر: 1279803
تاریخ انتشار : ۰۸ شهريور ۱۳۹۲ - ۰۲:۲۵

தெஹ்ரான் நடத்தவுள்ள “முஸ்லிம் பெண்களின் உலக ஒன்றியம்” மாநாடு

முஸ்லிம் பெண்களின் உலக ஒன்றியத்தின் மாநாடொன்று, தெஹ்ரானில் செப்டம்பர் 7ம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.



ஹஸ்ரத் மஃசூமா (ஸ.அ) அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு, இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளுக்கிடையில் நல்லிணக்கத்திற்கான பேரவை, இச்சர்வதேச மாநாட்டை நடத்தவுள்ளது என இக்னாவின் கும் கிளை தெரிவிக்கின்றது.


ஈராக், பஹ்ரைன், அல்ஜீரியா, லெபனான், பிரித்தானியா, எகிப்து, கசகஸ்தான், கொலம்பியா, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50க்கு மேற்பட்ட பெண் அறிஞர்கள் இம்மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர்.


நல்லிணக்கக் கலாசாரத்தை வலுப்படுத்தி மேம்படுத்துவதில் பெண்கள் அமைப்பின் வகிபாகம், மற்றும் பெண்கள் அமைப்புகளின் முன்னாலுள்ள சவால்களும் சந்தர்ப்பங்களும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இம்மாநாட்டின் போது ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.


பெண்களின் அந்தஸ்தை அபிவிருத்தி செய்வதற்கான கோட்பாடுகளும் உபாயங்களும், பெண்கள் அமைப்புகளின் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் உலகில் பெண்களின் அந்தஸ்தை உயர்த்துவதிலுள்ள தடைக்கற்கள் உள்ளிட்ட மற்றும் பல தலைப்புகளிலும் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.


1279278


captcha