کد خبر: 1285562
تاریخ انتشار : ۱۹ شهريور ۱۳۹۲ - ۰۷:۵۷

குர்ஆனியக் கதைகள் சிறார்களின் உலகை நெறிப்படுத்தும்

குர்ஆனியக் கதைகள் புனித அல்குர்ஆனைப் போதிப்பதுடன் சிறார்களின் உலகை நெறிப்படுத்துவதாகவும் அமையும் என எழுத்தாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.



இக்னாவுக்குக் கருத்துத் தெரிவித்த ஹுஜ்ஜதுல் இஸ்லாம் குலாம் ரிஸா ஹைதரி அபாரி, சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு குர்ஆனிய கதைகளின் கல்விப் பரிமாணம் பற்றிச் சுட்டிக் காட்டுகையில், சிறார்கள் மற்றும் இளைஞர்களின் உலகைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான கலைத்துவப் பண்புகளுடன் இக்கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.



இத்தகைய கதைகள் மக்களுக்குக் கல்வியூட்டுவதற்காகவே பயன்படுத்தப்படுவதனால், குர்ஆனிய கதைகள் அல்குர்ஆன் வசனங்களைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை எனவும் அவர் குறிப்பிட்டார்.



புனித அல்குர்ஆன் அதன் போதனைகளைத் தெளிவுபடுத்துவதற்காக குர்ஆனிய கதைகளை எவ்வாறு கையாளுகின்றது என்பதற்கான சில உதாரணங்களையும் அவர் முன்வைத்தார்.



கதைகளூடாக குர்ஆனிய செய்திகளையும் கருத்துகளை மக்களுக்குச் செலுத்துவது மிகவும் விளைதிறன் மிக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.



இறைவனும் அவனது கதைகளும்”, “40 ஹதீஸ்களும் கதைகளும்”, “குர்ஆனைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” மற்றும் “இறைத்தூதரும் அவர்களது கதைகளும்” உள்ளிட்ட பல நூல்களை ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹைதரி அபாரி எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



1284730

captcha