کد خبر: 1287370
تاریخ انتشار : ۲۴ شهريور ۱۳۹۲ - ۰۸:۵۲

செனகல்லில் “இஸ்லாமும் மனித உரிமைகளும்” மன்றம்

இஸ்லாமும் மனித உரிமைகளும் எனும் தலைப்பிலான தேசிய மன்றமொன்று செனகல்லின் டகார் நகரில் செப்டம்பர் 11ல் நடைபெறுகின்றது.



இந்நிகழ்ச்சியில் செனகல்லின் நீதியமைச்சர் சித்தீகி கபா மற்றும் பெருமளவான அறிஞர்கள், கல்விமான்கள் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகள் கலந்து கொள்ளவுள்ளதாக அப்ஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.



செனகல்லின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படவுள்ள இம்மன்றம் மேற்காபிரிக்காவுக்கான திறந்த சமூக சம்மேளன மண்டபத்தில் இடம்பெறுகின்றது.



ஆபிரிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கௌரவ விருந்தினர்கள் உட்பட பெருந்தொகையானோர் கலந்து கொள்ளும் இம்மன்றத்திற்கு ஷைக் அன்டா டயப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் நிலையமும் ஒத்துழைப்பு வழங்குகின்றது.



நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பா இஸ்லாத்தின் கருத்துகள் பற்றி இம்மன்றத்தில் ஆராயவுள்ளனர்.



இஸ்லாத்தின் பார்வையில் மனித உரிமைகள், சிவில் உரிமைகள் தொடர்பான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும், மனித உரிமைகளும் இஸ்லாத்திற்கும் மேற்கத்தேய பார்வைக்கும் இடையிலான வேறுபாடுகளும் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் இம்மன்றத்தில் உரைகள் நிகழ்த்தப்படவுள்ளன.



1286278

captcha