کد خبر: 1290444
تاریخ انتشار : ۲۹ شهريور ۱۳۹۲ - ۰۰:۵۰

தாருல் குர்ஆன் அமைப்பு நடத்தவுள்ள குர்ஆனிய கண்காட்சி

தாருல் குர்ஆன் அல்கரீம் அமைப்பு, நாட்டின் 5 பிராந்தியங்களில் குர்ஆன் கண்காட்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.



அமைப்பின் குர்ஆனிய ஆக்கங்கள் மற்றும் உற்பத்திகள் இக்கண்காட்சியின் போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.



நாட்டின் ஒவ்வொரு ஆறு மாகாணங்களும் ஒரு பிராந்தியமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இத்தகைய கண்காட்சிகள் இடம்பெறவுள்ளன.



குர்ஆனிய நிறுவகங்களினால் சிறந்த சேவைகளை வழங்குதல், குர்ஆனிய நிறுவகங்கள் மற்றும் மற்றும் நிலையங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்துதல், குர்ஆனிய சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை இனங்காணல், மற்றும் குர்ஆனிய நிறுவகங்கள் தம்மிடையே பரஸ்பர உறவையும் தொடர்பையும் வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கல் என்பன இக்கண்காட்சியின் பிரதான நோக்கங்களாகும்.



இக்கண்காட்சிகள், இஸ்லாமியப் புரட்சி வெற்றியின் ஞாபகார்த்தமாக அனுஷ்டிக்கப்படும் பத்து விசேட தினங்களுடன் இணைந்ததாக ஜனவரி மாத இறுதியில் நடத்தப்படவுள்ளன.



1290203

captcha