کد خبر: 1298643
تاریخ انتشار : ۱۴ مهر ۱۳۹۲ - ۰۸:۴۸

அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சியோனிசத்தினால் ஆதிக்கம் செய்யப்படுகிறது

அமெரிக்க அரசாங்கம், சர்வதேச சியோனிச வலைப்பின்னலின் ஆதிக்கத்தின் கீழுள்ளது என இஸ்லாமியப் புரட்சியின் ஆன்மீகத் தலைவர் இமாம் காமெனயி தெரிவித்துள்ளார்.



இராணுவப் பயிற்சியாளர்களின் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு அக்டோபர் 5ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றின் போது உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.



அமெரிக்க அரசாங்கம் நம்பகமற்ற, பகுத்தறிவற்ற, அகந்தையுள்ள, மற்றும் சியோனிச ஆதிக்கத்தின் கீழ் உறுதிமொழி பிரியாத அரசாங்கமாகவும் செயற்படுகின்றது எனவும் ஆன்மீகத் தலைவர் சுட்டிக்காட்டினார்.



ஜனாதிபதி ரூஹானியின் இராஜதந்திர நகர்வுகளுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்திய ஆன்மீகத் தலைவர், நியுயோர்க்கில் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திர முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் இராஜதந்திரக் குழு சாதகமான செயற்படுகின்ற போதிலும், அமெரிக்கா தொடர்பில் மிக அவதானமாகத் தொழிற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.



அமெரிக்காவில் எமக்கு நம்பிக்கையில்லை எனக் குறிப்பிட்ட இமாம் காமெனயி அவர்கள், அமெரிக்க அரசாங்கம் இந்த ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை நோக்கி நெகிழ்வுத்தன்மையைக் காண்பிக்க வேண்டியுள்ளது, ஏனெனில் சியோனிசமே அவ்வரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றது என்றார்.



1298235


captcha