றுவர்கள் மற்றும் பதின்வயதினருக்கான குர்ஆன் மனனப் போட்டியின் முதலாவது சுற்று செச்னியக் குடியரசின் குரஸ்னி நகரில் இடம்பெற்றது.
முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்போட்டி அக்டோபர் 2ம் திகதி முதல் இடம்பெற்று வருவதாக இக்னாவின் ஐரோப்பியக் கிளை தெரிவிக்கின்றது.
நாட்டின் சிறுவர்கள் மற்றும் 10 தொடக்கம் 25 வயது வரையான இளைஞர்கள், போட்டியின் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டதுடன், இதில் தகுதி பெறுவோர் அக்டோபர் 6ம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாம் சுற்றில் போட்டியிடுவர்.
நாட்டின் ஜனாதிபதி அலுவலகத்தின் பொறுப்பாளரும் செச்னிய ஜனாதிபதியின் பிரதிநிதியுமான ஹுஸைன் கதிரோவ், சிரேஷ்ட முப்தி, குடியரசின் பிரதம நீதியரசர் ஆகியோர் போட்டியின் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.
1297910