کد خبر: 1299823
تاریخ انتشار : ۱۶ مهر ۱۳۹۲ - ۰۸:۱۴

பாரிசில் ஈரான் நடத்தும் குர்ஆனியப் பாடநெறி

பிரான்சின் தலைநகர் பாரிசிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தினால் கல்வியியல் குர்ஆனியப் பாடநெறியொன்று நடத்தப்பட்டு வருகின்றது.



இப்பாடநெறியின் முதலாவது அமர்வு ஈரானிய மற்றும் பிரான்சியப் பேராளர்களின் பங்குபற்றுதலுடன் அக்டோபர் 4ம் திகதி இடம்பெற்றது என இந்நிலையம் அறிவித்துள்ளதாக இக்னாவின் ஐரோப்பியக் கிளை தெரிவிக்கின்றது.



குர்ஆனிய ஆய்வாளரும் சமய நிபுணருமான மிஷ்காதுத்தீனி அவர்களினால் குர்ஆனிய விடயங்கள் தொடர்பான இப்பாடநெறி நடத்தப்படுவதுடன் பேராளர்களின் ஐயங்கள் மற்றும் வினாக்களுக்கான பதில்களையும் விளக்கங்களையும் அவரே வழங்குகின்றார்.



தலைநகரிலுள்ள ஈரான் கலாசார நிலையம் இவ்வமர்வை உள்ளூர் நேரம் பிற்பகல் 6 மணி தொடக்கம் 8 மணி வரை பிரதி வெள்ளிக்கிழமைகளில் நடத்தி வருகின்றது.



1296963

captcha