کد خبر: 1300411
تاریخ انتشار : ۱۹ مهر ۱۳۹۲ - ۰۰:۳۸

குர்ஆனின் குரல்” சஞ்சிகையின் பதிய பாகங்கள் கர்பலாவில் வெளியீடு

குர்ஆனின் குரல் சஞ்சிகையின் மூன்றாம் மற்றும் நான்காம் பதிப்புகள், ஈராக்கின் கர்பலா நகரிலுள்ள இமாம் ஹுஸைன் (அலை) புனிதஸ்தலத்தின் தாருல் குர்ஆன் அல்கரீம் நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.



பெறுமதிமிக்க குர்ஆனிய ஆராய்ச்சிகள் மற்றும் பிரபல குர்ஆனிய காரி பற்றிய அறிமுகம் மற்றும் அவருடனான நேர்காணல் என்பவற்றையும் சஞ்சிகையின் புதிய பாகங்கள் உள்ளடக்கியுள்ளன என புனிதஸ்தலத்தின் இணையத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



புனிதஸ்தலத்தின் தாருல் குர்ஆன் நிலையத்தின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் குர்ஆனிய செயற்றிட்டங்கள் தொடர்பாக அறிமுகம் மற்றும் விளக்கங்கள் என்பனவும் இக்காலாண்டு சஞ்சிகையில் இடம்பிடித்துள்ளன.



அல்சபாஹ், அல்ஹபீஸ், ரிஸாலா அல்ஹுஸைன் (அலை) மற்றும் சிறுவர் சஞ்சிகையான நசீம் உள்ளிட்ட பல காலாண்டு மற்றும் மாதாந்த சஞ்சிகைகளை தாருல் குர்ஆன் நிலையம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



1299545

captcha