کد خبر: 1293755
تاریخ انتشار : ۰۵ مهر ۱۳۹۲ - ۰۰:۲۶

கானாவில் ஹஜ் காங்கிரஸ்

கானாவிலுள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாசார நிலையம், அந்த ஆபிரிக்க நாட்டில் ஹஜ் மாநாடொன்றை ஒழுங்கு செய்திருந்தது.



பல்வேறு அரசியல், கலாசார மற்றும் சமயப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இம்மாநாடு அந்நாட்டின் தலைநகர் ஆக்ராவில் இடம்பெற்றதாக இக்னாவின் ஆபிரிக்கக் கிளை தெரிவிக்கின்றது.



கானாவின் சிரேஷ்ட முப்தி நூஹ் ஒஸ்மான் ஷர்பது, இஸ்லாமிய தலைவர் அப்துல் காதிர் தாஹிர், கலாசாரப் பொறுப்பதிகாரி பெனின் முஹம்மத் காசிம், கல்வியமைச்சின் அதிகாரி இர்மியா ஷுஐப் மற்றும் ஷீஆ இளைஞர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



மாநாட்டில் உரையாற்றிய ஈரான் கலாசாரப் பொறுப்பதிகாரி ரிஸா பக்ஷாயிஷ், அரசியல் துறையில் முஸ்லிம் மத்தியில் ஐக்கியத்தைத் தவிர வேறெதுவும் ஹஜ்ஜின் போது முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்றார்.



இஸ்லாம் என்பது அன்பு மிக்க மார்க்கம் எனவும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அருளின் தூதர் எனவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.



இர்மியா ஷுஐப் அவர்கள் தமதுரையின் போது, ஐக்கியம் என்பது உலகில் முஸ்லிம்களின் மிகப் பெரும் விருப்பமாக உள்ளது என்றார்.



ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் பேணிக் கொள்வதன் மூலம் முஸ்லிம்கள் தமது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



ஹஜ்ஜின் மிக முக்கியத்துவம் வாய்ந்த செய்தி இஸ்லாமிய ஐக்கியமாகும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.



1293513

captcha