பிரான்ஸ் இஸ்லாமிய கலாசார நிறுவனம் இவ்விழாவை ஒழுங்கு செய்திருந்ததாக மைரி18.பாரிஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
இவ்வருட நிகழ்வில் செனகல் விருந்தினராகக் கலந்து கொள்வதுடன் அந்நாட்டின் இஸ்லாமிய கலாசாரம் மற்றும் மக்கள் என்பன தொடர்பான ஆக்கங்களையும் அது முன்வைக்கவுள்ளது.
பிரான்ஸில் இஸ்லாம் எனும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய கலாசார மற்றும் சமய நிகழ்ச்சிகளும் செனகல்லின் இஸ்லாமிய கலாசாரம் மற்றும் நாகரிகம் என்பன பற்றிய அம்சங்களும் இவ்விழாவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த ஆபிரிக்க நாட்டில், பல்வேறு சிந்தனைப் பள்ளிகளையும் பின்பற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இதை ஆவணப்படுத்தியுள்ள புகைப்படங்களின் கண்காட்சியொன்றும் இதன் போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
செனகல் முஸ்லிம்களின் சமய வாழ்க்கை முறை, மற்றும் கலாசார நடவடிக்கைகள் தொடர்பான ஆவணப் படமொன்றும் இதன் போது திரையிடப்படவுள்ளது.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட செனகல்லில் மொத்த சனத்தொகையில் 89 வீதமானோர் முஸ்லிம்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1288104