செப்டம்பர் 21 ல் இடம்பெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றிய முஹம்மத் முக்தார் குமா, தாருல் இப்தா நிலையத்தின் கோரிக்கையை தாம் ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டார்.
அல்குர்ஆனின் சூரா ஜின் எனும் அத்தியாயத்தின் முதலாவது வசனத்தை எகிப்தின் வெள்ளிக்கிழமை தொழுகைத் தலைவர்களின் சங்கம் தமது சுலோகமாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சில சமய நிலையங்கள் மூடப்படுவது வெள்ளிக்கிழமை ஒன்றுகூடல் தடை செய்யப்படுவது என்பவற்றின் பின்னாலுள்ள காரணி, அத்தகைய நிலையங்கள் தீவிரவாதத்தை நோக்கி நகர்த்தப்படுவதாகும் என்றார்.
சமயத்தின் பெயரில் இச்சமய நிலையங்களை சில சமயக் குழுக்கள் துஷ்பிரயோகம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எகிப்து முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு முஸ்லிம் நாடு. 2011ல் இடம்பெற்ற எழுச்சியினூடாக, அந்நாட்டை நீண்ட காலம் ஆட்சி புரிந்து வந்த ஹுஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டார். இவ்வெழுச்சியை இஸ்லாமிய மயப்படுத்துவதற்கு மக்கள் இஸ்லாமிய சுலோகங்களை கோஷித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
1291287