நகரின் மொழியியல் மற்றும் இலக்கிய அகாடமி இம்மன்றத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அல்யவ்ம் அல்சபி செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.
நிகழ்வின் பிரதான கருப்பொருள், ஜேர்மனின் பல்கலைக்கழக விரிவுரையாளரும் அரபு மொழி ஆய்வாளருமான குறித்த பெண்மணியின் கற்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதாகும்.
இந்த மூன்று நாள் மன்றம், ஐரோப்பிய-அரபிய பொதுப் பாரம்பரியங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்றையும் உள்ளடக்கியிருக்கும் என அகாடமி அறிவித்துள்ளது.
வைபவத்தின் ஒரு பகுதியாக, 20,000 யூரோ பெறுமதியான சிக்மன் புரெய்ட் விருதினை ஏஞ்சலிகா நியுவேர்த்துக்கு வழங்கும் நிகழ்வும் இடம்பெறும்.
சிக்மன் புரெய்ட் விருது, கல்வித்துறையில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய கல்விமான்களுக்கு அந்நாட்டிலுள்ள நிறுவனமொன்றினால் வழங்கப்படும் வருடாந்த விருதாகும். இதன் முதலாவது விருது 1964ம் வருடம் வழங்கப்பட்டது.
மேலும், 50,000 யூரோ பெறுமதியான மற்றொரு விருது ஜேர்மனிய நூலாசிரியர் சிப்லி லீவ்ட்ச்சருக்கு வழங்கப்படவுள்ளது.
1294761