பள்ளிவாயலின் புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது இப்பிரதி கண்டெடுக்கப்பட்டதாக இல்பஷ்யார்ஒன்லைன் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
இப்பழமை வாய்ந்த குர்ஆனிய கையெழுத்துப் பிரதி, ஹிஜாஸி எழுத்தணி முறையில் எழுதப்பட்ட இஸ்லாமிய நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டத்தைச் சேர்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிவாயலின் புனர்நிர்மாணப் பணிகள், கட்ட நிபுணர்கள் குழுவொன்றின் ஒத்துழைப்புடனும் யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகளின் உதவியுடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எக்ஸ்ரே ரேடியோ வீச்சு போன்ற நவீன தொழினுட்பங்களின் உதவியுடன் பள்ளிவாயல் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1279569