کد خبر: 1280993
تاریخ انتشار : ۱۰ شهريور ۱۳۹۲ - ۰۸:۲۰

எகிப்தில், மிகப்பெரிய குர்ஆன் பிரதியொன்று மரப்பலகையில் எழுதப்பட்டு வருகின்றது

எகிப்தில் மிகப் பெரிய அல்குர்ஆன் பிரதியொன்றை உருவாக்கும் பணியில் இரு அரபுக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.



எகிப்தின் ஆரிப் ரமழான் ஹமீத் இப்ராஹீம் மற்றும் சிரியாவின் ரியாத் நுவாப் அல்ரதி ஆகிய இரு கலைஞர்கள் புனித அல்குர்ஆன் வசனங்களை மரப்பலகையில் எழுதி வருகின்றனர்.



தமது இப்பணியில் இலக்கு மற்றும் பணிகள் தொடர்பாக விபரிக்கும் பொருட்டு முகநூலில் தமக்கான பக்கமொன்றையும் அவர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.



அல்ராதி இப்பணியை சிரியாவில் ஆரம்பித்த போதிலும் அது முழுமையடையவில்லை. அதன் பின் எகிப்துக்கு வந்த அவர், ஹமீத் இப்ராஹீமின் ஒத்துழைப்புடன் மரப்பலகையில் புனித அல்குர்ஆனை எழுதும் பணியை மீண்டும் தொடர்ந்துள்ளார்.



ஆப்கானிஸ்தானிய எழுத்தணிக் கலைஞர் ஒருவர் இதேபோன்றதொரு பணிக்காக ஐந்து வருடங்களைச் செலவிட்டுள்ளார்.



தற்போது, உலகின் மிகப் பெரிய அல்குர்ஆன் ஆப்கானிஸ்தானில் உள்ளது. இம்மிகப் பெரும் பிரதியை உருவாக்குவதற்காக ஆப்கானியக் கலைஞர் ஐந்து வருடங்களைச் செலவிட்டார்.



தற்போது தயாரிக்கப்பட்டு வரும் குர்ஆன் பிரதியானது 2.28 மீற்றர் நீளமும் 1.55 மீற்றர் அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.



2011ல் வடிவமைக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய அல்குர்ஆன் பிரதி 2 மீற்றர் நீளமும் 1.5 மீற்றர் அகலமும் கொண்டதாக இருந்தது.



1280348

captcha