போட்டியின் நிறைவு விழாவின் போது தூனிசியாவின் சமய விவகார அமைச்சர் நிருத்தீன் குதாமியிடமிருந்து தனக்கான பரிசை அவர் பெற்றுக் கொண்டார்.
இப்பிரிவில், லிபியாவின் ஒசாமா நஜிப் பராஜ் பின் ஷித்வான், தூனிசியாவின் அலி பின் சாலிஹா, மொரோக்கோவின் பாசிம் அப்துல்கனி அல்உர்வா, மற்றும் இந்தோனேசியாவின் பத்ஹுல்லாஹ் வாஹிதீன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதேவேளை குர்ஆன் மனனப் பிரிவில் கெமரூனைச் சேர்ந்த அல்நாசிர் முதலிடத்தைப் பெற்றுக் கொள்ள, லிபியா, தூனிசியா, யெமன் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் ஏனைய இடங்களைப் பெற்றுக் கொண்டன.
போட்டியின் நடுவர் குழுவில் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சிறந்த குர்ஆனிய நிபுணர்கள் பலர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் போட்டியின் நிறைவு விழாவின் போது கௌரவிக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 24-29 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற தூனிசியாவின் மூன்றாவது சர்வதேச குர்ஆன் போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த குர்ஆனிய ஹாபிழ்களும் காரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1280139