இமாம் ஸாதிக் (அலை) அவர்களது ஷஹாதத் நினைவு தின விழாக்களை ஏற்பாடு செய்வோருடன் ஆகஸ்ட் 31 சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது சிரேஷ்ட ஆயத்துல்லாஹ் ஹுஸைன் நூரி ஹமதானி இவ்வாறு குறிப்பிட்டார்.
இமாம் ஸாதிக் (அலை) அவர்களது சீறா மற்றும் விலாயத் கருத்தியல்கள் தொடர்பான பிரசார அமர்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டியதன் தேவை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஷவ்வால் 25ம் நாளுடன் இணைந்த செப்டம்பர் 2ம் திகதி திங்கட்கிழமை, இமாம் ஸாதிக் (அலை) அவர்களது உயிர்த்தியாக நினைவு தினமாகும்.
சிரியாவில் வஹ்ஹாபிகள் மற்றும் சியோனிசவாதிகளினால் முன்னெடுக்கப்படும் குற்றச்செயல்கள் மற்றும் அந்நாட்டின் மீதான அமெரிக்க அச்சுறுத்தல்கள் என்பன பற்றிக் குறிப்பிட்ட அவர், சிரிய மக்களின் போராட்டம் மற்றும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் பிரசன்னம் என்பவற்றினால் எதிரிகள் சிரியாவில் படுதோல்வி கண்டுவிட்டனர், இதனாலேயே அந்நாட்டை ஆக்கிரமிக்க இரசாயன ஆயுதங்கள் பற்றிய பொய்க்குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்துள்ளனர் என்றார்.
1280975