சீனாவின் ஹையுவான் மாகாணத்திலுள்ள முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசமான நிங்ஷியா நகரில் வசிக்கும் முஸ்லிம் விவசாயியான மஜின்பு, சீனாவின் உள்ளேயும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் குர்ஆனிய கையெழுத்துப் பிரதிகளைச் சேகரித்துள்ளார்.
அவர் சேகரித்துள்ள பிரதிகளுள் சில, ஆயிரம் வருடங்களுக்கு முந்தியவையாகவும் தற்போது பெறுமதி மதிக்கவியலாததாகவும் உள்ளன.
தனது வீட்டின் 10 மீற்றர் நீளமான அறையொன்றில் இப்பிரதிகளை வைத்துள்ள அவர், முதற்தடவையாக இவற்றை ஒளிப்பதிவு செய்வதற்கு தொலைக்காட்சி வலையமைப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
மஜின்பு தனது இளம் வயதில் குர்ஆனைக் கற்று, 1993ம் வருடம் தொடக்கம் அரிய குர்ஆன் பிரதிகளைச் சேகரிக்க ஆரம்பித்தார்.
அவரது தொகுப்பிலுள்ள கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கை 600க்கு மேற்பட்டதாகும்.
முஸ்லிம்கள், தாம் 1400 வருடங்களாக சீனாவில் வசித்து வருவதாக நம்புகின்றனர். சீனாவின் மொத்த சனத்தொகையில் 1-2 வீதமானோர் முஸ்லிம்கள் என சில புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
1286102