இது, இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர்கள் மற்றும் பதின்வயதினருக்கென வருடாந்தம் நடத்தப்படும் போட்டியாகும் என போட்டியின் ஏற்பாட்டாளர் முஹம்மத் ஹுஸைன் கும்மி குறிப்பிட்டதாக இக்னாவின் மேற்காசியக் கிளை தெரிவிக்கின்றது.
இப்போட்டியையும், இந்திய அறிஞர்கள் மற்றும் கல்விமான்கள் பலர் கலந்து கொண்ட நிறைவு விழாவையும் நகரிலுள்ள முஹம்மத் அலி ஷாஹ் ஹுஸைனிய்யாஹ் நடத்தியது.
வைபவத்தில் உரையாற்றிய ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அமீர் ஹைதர் இமாம் ரிழா (அலை) அவர்களின் சீறா தொடர்பாக விளக்கமளித்தார்.
இமாம் அவர்களது காலத்தில் பல்வேறு அறிவியல் துறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியானது, இஸ்லாத்தின் அடிப்படைப் போதனைகள் மற்றும் நம்பிக்கைகள் என்பவற்றுக்கு எதிரான போக்குடைய அறிவியல், தத்துவவியல் சார்ந்த சிந்தனைகளைத் தோற்றுவித்தது என்றார்.
இமாம் ரிழா (அலை) அவர்கள் இக்காலப்பகுதியில் உண்மையான இஸ்லாத்தையும் நேரான பாதையையும் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதில் மிகவும் சிரத்தையெடுத்துப் பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1291030