کد خبر: 1294823
تاریخ انتشار : ۰۶ مهر ۱۳۹۲ - ۱۲:۰۵

சுன்னி புனிதத்துவங்களை அவமதிப்பதற்கெதிராக இமாம் காமெனயி வழங்கிய ஃபத்வாவுக்கு முன்னாள் எகிப்திய முப்தி பாராட்டு

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் ஆன்மீகத் தலைவர் இமாம் காமெனயி அவர்கள், சுன்னி புனிதத்துவங்கள் மீதான அவமதிப்பைத் தடை செய்து வெளியிட்டுள்ள ஃபத்வாவுக்கு எகிப்தின் முன்னாள் முப்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.



அல்அரபிய செய்தி வலையமைப்புக்குக் கருத்துத் தெரிவித்த ஷைக் அலி ஜும்ஆ மேலும் குறிப்பிடுகையில், இந்த ஃபத்வா, முஸ்லிம் ஐக்கியத்தை வலுப்படுத்தக்கூடிய இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்குமான பெரும் சேவையாகும் என்றார்.



மேலும், இறைத்தூதர் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ளுமாறு ஈராக்கிய ஷீஆ அறிஞர்கள் வலியுறுத்தியுள்ள நிகழ்வையும் எகிப்திய முப்தி மிகவும் வரவேற்றுப் பேசினார்.



முஸ்லிம் உலகெங்குமுள்ள ஷீஆக்களுடன் சுன்னி அறிஞர்களும் இவ்விடயத்தில் ஒத்துழைத்து நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஷைக் ஜும்ஆ சுட்டிக்காட்டினார்.



ஸஹாபாக்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது ஷீஆ சமூகத்தில் ஏற்கப்பட்ட ஒன்றல்ல என்பதும், இது இஸ்லாத்தின் எதிரிகளின் திட்டமிட்ட சதி என்பதும் ஷீஆ அறிஞர்களுடனான சந்திப்பொன்றில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.



ஷீஆக்களுக்கும் சுன்னிகளுக்கும் இடையே முக்கியத்துவம் மிக்க வேறுபாடுகள் எதுவும் கிடையாது எனக் குறிப்பிட்ட ஷைக் ஜும்ஆ, ஷீஆக்களின் சட்டத்துறை சுன்னிகளின் சட்டத்துறையை விடவும் முற்போக்கானது எனவும் குறிப்பிட்டார்.



1293998

captcha