ஆன்மீகத் தலைவரின் பார்ஸ் மாகாணப் பிரதிநிதி ஆயத்துல்லாஹ் அஸதுல்லாஹ் இமானி இக்னாவுக்கு வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிடுகையில், இவ்விஸ்லாமிய நாட்டிலுள்ள அனைத்து நிறுவகங்களும் அமைப்புகளும் சமூகத்தில் சமய கலாசாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
இஸ்லாமியக் குடியரசு ஸ்தாபிதத்தின் இலக்கு, சமூகத்தில் ஆன்மீகத்தை மேம்படுத்துவதும் சமய ஒழுக்கவியலையும் இஸ்லாமிய வாழ்க்கை முறையையும் பரவச் செய்ய உதவுவதுமாகும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விஸ்தாபிதத்தின் நிறுவகங்கள் மற்றும் அரசாங்க சபைகள் அனைத்தும் இக்குறிக்கோளை நோக்கிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை பற்றியும் ஆயத்துல்லாஹ் இமானி சுட்டிக்காட்டினார்.
இஸ்லாமிய கலாசார அவிருத்திக்கென நல்ல முயற்சிகள் பல இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், கருத்தியல் ஸ்தானமொன்றை அடைவதற்காக எமக்கு இன்னும் நீண்ட பாதையுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
1295941