குர்ஆன் பாராயணம், குர்ஆன் மனனம் மற்றும் குர்ஆனிய விரிவுரை ஆகிய பிரிவுகளைக் கொண்ட இப்போட்டி புனித கர்பலா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக இமாம் ஹுஸைன் (அலை) புனிதஸ்தலத்தின் பரிபாலன சபையின் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
புனிதஸ்தலத்தின் பரிபாலன சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஒரு நாள் போட்டி நிகழ்ச்சியில் ஈராக்கின் பல்வேறு மாகாணங்களையும் சேர்ந்த குர்ஆனிய அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
ஈராக்கின் ஷீஆ வக்பு திணைக்களத்துடன் இணைக்கப்பட்டுள்ள குர்ஆனிய விஞ்ஞானங்களுக்கான நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஐந்தாவது குர்ஆனிய வார நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இப்போட்டி இடம்பெற்றது.
போட்டியாளர்களுள் ஒருவரான சியா யூசுப் ஜாசிம் குறிப்பிடுகையில், இப்போட்டியானது ஈராக்கின் குர்ஆனிய காரிகளுக்கும் ஹாபிழ்களுக்கும் அவர்களது குர்ஆனியத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்றார்.
கிர்குக் மாகாணத்தைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளரான அப்துல் அஸீம் கலீல் குறிப்பிடுகையில், இப்போட்டியானது குர்ஆனிய காரிகளுக்கும் ஹாபிழ்களுக்கும் அவர்களது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்ததொரு களமாக அமைந்தது என்றார்.
எகிப்தின் பிரபல காரி பரஜுல்லாஹ் ஷஸ்லி அவர்கள், இப்போட்டியில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.
1297350