کد خبر: 1299824
تاریخ انتشار : ۱۶ مهر ۱۳۹۲ - ۰۸:۱۴

பள்ளிவாயல்களை அழித்து விட அங்கோலா அரசாங்கம் தீர்மானம்

அங்கோலாவிலுள்ள மூன்று பள்ளிவாயல்களையும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களையும் தகர்த்து விடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அங்கோலாவிலுள்ள இஸ்லாமிய நிறுவகங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளன.



ஆபிரிக்க நாடான அங்கோலாவின் அரசாங்கம், தலைநகர் லுவாண்டாவிலுள்ள மூன்று பள்ளிவாயல்களின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில், குறித்த பள்ளிவாயல்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.



நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அரசாங்க யாப்புக்கு முரணாக நடந்து கொள்வதாகவும் அவர்களது பள்ளிவாயல்களும் வழிபாட்டுத் தலங்களும் அச்சம் ஏற்படுத்துபவையாக இருப்பதனாலும் அவற்றை நிர்மூலமாக்கி விடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அரசாங்கத்திடமிருந்து தமக்கு கடிதமொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக அங்குள்ள முஸ்லிம் தலைவர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.



முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் அரசாங்க சட்ட விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டார்கள் என்பதற்காக அச்சமூகத்தின் வழிபாட்டுத் தலங்கை முற்றாக நிர்மூலமாக்கத் தீர்மானிப்பதென்பது மிகவும் அநீதியான ஒரு நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.



உண்மையில் சமய ரீதியாக எவ்வித அச்சுறுத்தலையும் இங்குள்ள பள்ளிவாயல்கள் பொதுமக்களுக்கோ அரசாங்கத்திற்கோ ஏற்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.



அங்கோலா முஸ்லிம்கள், தமது பள்ளிவாயல்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இதுவரை 35000 டொலர்களைச் சேகரித்துள்ளனர்.



சங்கோ பகுதியிலுள்ள பள்ளிவாயலைத் தகர்ப்பதற்காக பிரவேசித்த பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதி பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்வாங்கிச் சென்றனர்.



அங்கோலா, கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தென்மேற்கு ஆபிரிக்க நாடாகும். 17 மில்லியன் மக்களைக் கொண்ட அங்கோலா முஸ்லிம்கள் அந்நாட்டின் மொத்த சனத்தொகையில் 3 வீதமாக உள்ளனர்.



1299383

captcha