ஈராக்கிலுள்ள புனிதஸ்தலங்களின் மீள்கட்டுமானத்திற்கான கமிட்டியின் சன்ஜான் பிரதேசக் கிளையின் பொறுப்பாளர் பாபாயி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த வாரம் ஈராக்கிற்குப் புறப்பட்டுச் சென்ற சன்ஜான் மற்றும் இஸ்பஹான் ஆகிய நகரங்களைச் சேர்ந்த குழுக்களினால் இவ்வாயில்கள் காசிமைனுக்குக் கொண்டுவரப்பட்டவை என்றார்.
இக்குழுக்கள், சன்ஜான் மாகாணத்தின் பல்வேறு நகரங்களைக் கடந்து சென்ற வேளையில் பொதுமக்கள் மிகவும் மரியாதையுடன் அவ்வாயில்களை வரவேற்றனர்.
இஸ்பஹானைச் சேர்ந்த பொதுமக்களின் நிதி அனுரசணையில் அப்பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள் கடந்த வருடம் இவ்வாயில்களை நிர்மாணித்திருந்தனர்.
சியாரா ஜும்ஆ, ஜவ்ஷன் கபீர் போன்ற பிரார்த்தனைகளின் சில பகுதிகளும் மற்றும் துஆக்களும் இவ்வாயில்களில் பதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாயில்கள், ஈதுல் அழ்ஹா தினத்தில் காசிமைன் நகரைச் சென்றடைவதுடன், புனிதஸ்தலத்தின் பாபுல் கிப்லா பகுதியில் இவை நிறுவப்படவுள்ளன.
1299982