இல்டி பிரான்ஸ் பிராந்தியத்தின் ஆர்ஜென்டியல் நகரிலுள்ள இஸ்லாமியப் பாடசாலையினால் இப்பாடநெறி நடத்தப்பட்டதாக சபிர்நியூஸ் தெரிவிக்கின்றது.
ஆண்களுக்கு மட்டுமெனத் திட்டமிடப்பட்டிருந்த இக்குர்ஆனியப் பாடநெறி, அடுத்த வருட ஜூன் மாதம் வரை தொடரும் எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
தஜ்வீத் ஓதல் சட்டங்கள் தொடர்பான விளக்கவுரை, அல்குர்ஆனை ஓதும் போது இச்சட்டங்களை எவ்வாறு பிரயோகிப்பது என்பன தொடர்பாக இப்பாடநெறியில் போதிக்கப்படுகின்றது.
வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணிவரை இடம்பெறவுள்ள இப்பாடநெறியில் ஆர்வமுள்ள அனைத்து வயதுக் குழுவினரும் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கைரோப்பாவின் அதிக முஸ்லிம் சிறுபான்மையைக் கொண்ட நாடாக பிரான்ஸ் விளங்குகின்றது. அங்கு சுமார் ஆறு மில்லியன் முஸ்லிம்கள் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
1300587