குவைத் பொது அவ்காப் ஸ்தாபனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, குர்ஆனிய மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் பெருந்தொகையானோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற மாபெரும் விழாவொன்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்விழாவின் போது, ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் அப்துல்முஹ்ஸின் அல்கராபி தெரிவிக்கையில், 33 அரசாங்க மற்றும் ஏனைய சபைகள் 1596 நபர்களை இப்போட்டிக்காக இணைத்திருந்தனர்.
அவர்களுள் 909 சிறார்கள் உட்பட 1761 பேர் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர் எனவும் அல்கராபி குறிப்பிட்டார்.
நீதியான போட்டியாக நடத்தும் பொருட்டு இப்போட்டியின் வினாக்கள் கணினி மூலமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தன என மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.
தகவல்: KUNA